Thursday, January 10, 2008

வந்துடோம்ல்ல


பதிவு போட்டு ரொம்ப நாளாச்சா, அதான் மீண்டும்,

ஒலக மயமாக்கல் பத்தி வ.கவும் இ.கவும் எதுக்கு ஒத்துக்கமாட்றாங்கன்னு இந்த கிராமாத்தானுக்கு புரியல
போஸ்டர் பாத்தோம்ன்னா சேகு, மாசே,லெனின்,மாக்ஸ்,இங்கர்சால்,ஸ்டாலின்(கலைஞர் மகன் இல்ல), காஸ்ட்ரோ, கோசி-மின் இப்படி ஒலக புரட்சியாளர்கள்(!?)
நமக்குதான் அருவா சுத்தி, கதிர் அருவா படத்த ஏன் போடமாட்றாங்க நாம தான் தினம் அத பாக்கோம்ல்ல ஐயா தருமீ(மா)வான் நீங்க தான் வெளக்கனும்

Thursday, September 20, 2007

ரமண மகரிசி


மருத ராமநாதபுரம் திருச்சுழியில் பிறந்து மருதயில அவருக்கு சமாதி நிலை ஏற்பட்டு திருவண்ணாமலையி அமரத்துவம் அடைந்தார். அதற்காக அவருக்கி மதுர மீனாட்சி கோவில் தெக்கு கோபுரம் எதிர் உள்ள தெருவில் ஒரு தியானம்ண்டபம் இருக்குல்ல

Thursday, January 11, 2007

என்னோட தலைவர்:



ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, இரத்தம் சிந்தி, உயிர்த் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும் கேட்டும் பெறுவதல்ல பேரம் பேசிப் பெறுவதும் அல்ல’ என்று முழங்கியவர் நேதாஜி.
ஏ(லே)ய்! போசு!! தெரியும்மா?

Friday, December 15, 2006

திருவேடகம் தெரியும்மா?


மதுரைக்கு மேற்கே சோழவந்தானூக்கு முன்னால இந்த வூரு இருக்கு, இதன் பெருமை: சைவ சமயத்தை மீண்டும் மதுரல்ல தழைக்க காரணம், சைவ பெரியார் திருநாவுகரசர் சமண மதத்தலைவர்களின் புணல் வாதம் நடந்த போது திருநாவுகரசரின் சைவ ஏடுகலை வைகை ஆற்றில் விட்ட போது இந்த ஊரில் ஏடு கரை ஏறியதால் திரு+ஏடு+அகம் மறுவி இந்த பெயர் வந்தது. இந்த கிராமத்தில் ஒரு சிவன் கோவில் உள்ளது, மதுரை பெரியார் பேருந்து நிலையதிலிருந்து பேருந்து வசதி உண்டு

Friday, December 1, 2006

என்னோட கிராமம் : கோச்சடை


இந்த பூதம் தாங்கோ எங்க ஊரின் அடையாளம்
கோச்சடை முத்தையா சுவாமி கோவில்ல இருக்கு இது தமிழக சுற்றூலா துறை வரைபடத்தில் பாக்கலாம்.
ஊரின் பெயர் காரணம் : புட்டு திருவிழா மதுரைல்ல நடக்கும் தெரியுமில்ல அதாங்க சொக்கநாதர் பாண்டிய மன்னனிடம் பிரம்படி வாங்கிய கதை அது நடந்தது எங்க ஊரிலதான்
கோச்சடை : கோபம்+சடையன்(சிவன் கோபத்துடன் வந்து படுத்த இடம் அதான் இன்னும் தண்ணீர் தொட்டில்ல அணை போட்டுட்டு இருக்காங்க !!!)
வாங்க வந்து பாருங்க
எங்க தோப்பிலிருந்து தான் திருவிழாவுக்கு திருவாத்தி மரம் போகும். அதற்கு சாட்சி வைகை கரையோரம் இருக்கும் மீனாட்சி கோவில்ல இருக்கும் பிரம்பு வடிவம் வடிக்கப்பட்டுள்ள சிவலிங்கம் வந்து பாருங்க.

ஏவூரு மதுர

காட்ல தான் மான் இருக்கனுமா, எங்க மதுரல கிழக்க மேக்க ஓடாத மான்னுக ரெண்டு அதான் நம்ம சிலைமான்னும் துவரிமான்னும் தான்
இப்படி காட்டுகுள்ளர இருக்கிறதுக நிறைய எங்கவூருல இருக்குங்க அப்புக்களா

Thursday, November 30, 2006

கடலளவு கருத்து சொல்ல ஆசை

வாழ்த்து எனக்கு வசவு தருமிக்கு