Wednesday, August 18, 2010

உமா சங்கர் IAS


உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை. புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.
அரசு இது போன்ற அதிகாரிகளுக்கு தண்டனைகளைத் தருவதற்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும், கண்டனத்தையும் இவ்விடுகை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

நல்ல விசயத்துக்கு காபி பேஸ்ட் தப்பில்லை
நன்றி http://priyamudanvasanth.blogspot.com/2010/08/ias.

Tuesday, August 17, 2010

உமாசங்கர் பணி நீக்கம் அரசின் பழிவாங்கும் போக்கு

உமாசங்கர் பணி நீக்கம் அரசின் பழிவாங்கும் போக்கு : ஜெயலலிதா

"உமாசங்கரை தற்காலிக பணிநீக்கம் செய்திருப்பது தி.மு.க., அரசின் பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: போலி ஜாதி சான்றிதழை கொடுத்து, அரசு பணியில் சேர்ந்து விட்டார் என்ற காரணத்தை காட்டி, ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்த 1990ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கரை தற்காலிக பணிநீக்கம் செய்திருப்பது தி.மு.க., அரசின் பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது. அகில இந்திய பணி நியமனங்கள் அனைத்தும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் செய்யப்படுகின்றன. ஐ.ஏ.எஸ்., பணியில் நியமனம் செய்யப்படும் ஒவ்வொருவரின் பூர்வீகம் குறித்த விவரங்களை கண்டறிவதும், அனைத்து சான்றிதழ்களை சரிபார்ப்பதும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்பு. அரசு கேபிள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக உமாசங்கர் நியமிக்கப்பட்டார். பின் பழி வாங்கப்பட்டு அரசு கேபிள் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.


அரசு கேபிள் நிறுவனமும் செயலிழந்து விட்டது. கோடிக்கணக்கான மக்கள் பணம் விரயமாக்கப்பட்டது. அரசு கேபிள் நிறுவனத்தின் தற்போதைய நிலை என்ன? அரசு கேபிள் நிறுவனத்தின் மூலம் எத்தனை பேர் கேபிள் இணைப்பு பெற்றுள்ளனர்? அரசு கேபிள் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட 400 கோடி ரூபாய் என்னவாயிற்று? கருணாநிதி குடும்பத்தினரின் அராஜகங்களை வெளிக் கொணர்ந்ததற்காக, ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ஏன் பழி வாங்கப்படுகிறார்? இதை தமிழக மக்கள் இன்னும் எத்தனை நாட்கள் தான் பொறுத்துக் கொள்ள வேண்டும்? இதற்கு கருணாநிதி விளக்கம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

thanks - தினமலர்

சுட்ட செய்தி

ON (UN) TOUCHABILITY


thanks to http://thedipaar.com/news/news.php?id=15132

ஜெயலலிதா ஆட்சியின்போது நடந்த சுடுகாட்டு கூரை ஊழலை அம்பலப்படுத்தியவரும், தற்போதைய திமுக அரசு கொண்டு வந்து தற்போது முடமாகிக் கிடக்கும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தை, சன் டிவியின் சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்திடமிருந்து காக்கப் போராடி தற்போது ஊழல் குற்றச்சாட்டை சுமந்து நிற்பவருமான ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர், தன்னை அரசு பழிவாங்குவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


மேலும் அமைச்சர் ஒருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு ச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்ததால் ஆத்திரமடைந்துள்ள அரசு தன்னைப் பழிவாங்கும் வகையில் ஊழல் வழக்கை ஏவி விட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், உயர்நீதிமன்றத்தில் உமா சங்கர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறப்பட்டுள்ளது:


தமிழ்நாடு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக 1991-ம் ஆண்டு பதவியேற்றேன்.


1995-ல் மதுரை மாவட்ட கூடுதல் கலெக்டராகவும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராகவும் பணியாற்றினேன். அப்போது ஜவஹர்லால்நேரு வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சுடுகாட்டு கூரை கட்டுவதற்கு ஒப்பந்தம் வழங்குவது தொடர்பாக மாவட்ட கலெக்டரின் தவறான உத்தரவை செயல்படுத்த மறுத்துவிட்டேன்.


1996-ம் ஆண்டு விஜிலென்ஸ் இணை கமிஷனராக நியமிக்கப்பட்ட நேரத்தில் முன்னாள் முதல்வர், அமைச்சர்கள், மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள், அதிகாரிகள் மீது ஊழல் வழக்கு தொடர்வதற்கு பரிந்துரை செய்தேன்.


1999-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திருவாரூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றினேன். 2006-ல் எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும், பிறகு 2008-ம் ஆண்டு அரசு கேபிள் டி.வி.கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனராகவும் நியமிக்கப்பட்டேன்.


பதவி ஏற்றது முதல் எந்தவித புகாருக்கும் ஆளாகாமல் நேர்மையாகப் பணியாற்றி வருகிறேன். அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக 2008, அக்டோபர் 30-ம் தேதி நியமிக்கப்பட்டேன். சன் டி.வி. குழுமத்துக்குச் சொந்தமான சுமங்கலி கேபிள் டி.வி. நிறுவனம் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை முடக்க அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டது.


எஸ்.சி.வியின் சட்டவிரோத நடவடிக்கைகள்


இந்த முயற்சிகளில் இருந்து அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொண்டேன். சுமங்கலி கேபிள் நிறுவனத்தின் சட்ட விரோத நடவடிக்கைகளையும் அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன்.


சுமங்கலி கேபிள் நிறுவனத்தை தேசியமயமாக்குவதுடன், அமைச்சர் ஒருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் தடுப்புச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தேன்.


இதையடுத்து, சிறுசேமிப்புகள் துறை ஆணையராக நான் பணியிடமாற்றம் செய்யப்பட்டேன். இப்போது அரசு கேபிள் டி.வி. நிறுவனம் செயலிழந்து காணப்படுகிறது.


சுமங்கலி கேபிள் நிறுவனத்தை தேசியமயமாக்க வேண்டும் என்ற பரிந்துரைத்த காரணத்தால், என் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டது. சட்ட விரோதமான இந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தடை விதித்தது.


இதைத் தொடர்ந்து, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறி ஊழல் தடுப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் என்னிடம் விசாரணை நடத்தினார். ஆனால், என் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.


ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதால் அவ்வப்போது எனது சொத்து விவரங்களை அரசிடம் சமர்ப்பித்து வருகிறேன். என் மீது விசாரணை நடத்துவதற்கு சட்டப்படி அனுமதியும் பெறப்படவில்லை.


ஊழல்வாதிகளைக் காப்பாற்றும் தமிழக அரசு


நேர்மையாகவும், பொதுமக்களுக்கு நன்மை தரும் வகையிலும் செயல்பட்டதால் என் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஊழல்வாதிகளையும், அதிகாரம் மிக்கவர்களையும் காப்பாற்றும் அரசு, அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்ததால் என்னை பழிவாங்குகிறது.


வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக போதுமான ஆதாரங்கள் இருந்தால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், விசாரணை என்ற பெயரில் என் மீதும், எனது குடும்பத்தினர், நண்பர்கள் மீது போலீஸாரை ஏவி விட முடியாது. இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.


இம்மனு நீதிபதி தனபலான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, உமாசங்கர் மீதான ஊழல் தடுப்புப் போலீஸாரின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும் ஜூன் 28ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.


இந்த அதிகாரி தவறான காரணங்களுக்காக அரசால் தண்டிக்கப்படுகிறார் நம் ஒற்றுமையான உணர்வை அரசுக்குத் தெரிவிப்போம்.

Thursday, January 10, 2008

வந்துடோம்ல்ல


பதிவு போட்டு ரொம்ப நாளாச்சா, அதான் மீண்டும்,

ஒலக மயமாக்கல் பத்தி வ.கவும் இ.கவும் எதுக்கு ஒத்துக்கமாட்றாங்கன்னு இந்த கிராமாத்தானுக்கு புரியல
போஸ்டர் பாத்தோம்ன்னா சேகு, மாசே,லெனின்,மாக்ஸ்,இங்கர்சால்,ஸ்டாலின்(கலைஞர் மகன் இல்ல), காஸ்ட்ரோ, கோசி-மின் இப்படி ஒலக புரட்சியாளர்கள்(!?)
நமக்குதான் அருவா சுத்தி, கதிர் அருவா படத்த ஏன் போடமாட்றாங்க நாம தான் தினம் அத பாக்கோம்ல்ல ஐயா தருமீ(மா)வான் நீங்க தான் வெளக்கனும்

Thursday, September 20, 2007

ரமண மகரிசி


மருத ராமநாதபுரம் திருச்சுழியில் பிறந்து மருதயில அவருக்கு சமாதி நிலை ஏற்பட்டு திருவண்ணாமலையி அமரத்துவம் அடைந்தார். அதற்காக அவருக்கி மதுர மீனாட்சி கோவில் தெக்கு கோபுரம் எதிர் உள்ள தெருவில் ஒரு தியானம்ண்டபம் இருக்குல்ல