Friday, December 15, 2006

திருவேடகம் தெரியும்மா?


மதுரைக்கு மேற்கே சோழவந்தானூக்கு முன்னால இந்த வூரு இருக்கு, இதன் பெருமை: சைவ சமயத்தை மீண்டும் மதுரல்ல தழைக்க காரணம், சைவ பெரியார் திருநாவுகரசர் சமண மதத்தலைவர்களின் புணல் வாதம் நடந்த போது திருநாவுகரசரின் சைவ ஏடுகலை வைகை ஆற்றில் விட்ட போது இந்த ஊரில் ஏடு கரை ஏறியதால் திரு+ஏடு+அகம் மறுவி இந்த பெயர் வந்தது. இந்த கிராமத்தில் ஒரு சிவன் கோவில் உள்ளது, மதுரை பெரியார் பேருந்து நிலையதிலிருந்து பேருந்து வசதி உண்டு

Friday, December 1, 2006

என்னோட கிராமம் : கோச்சடை


இந்த பூதம் தாங்கோ எங்க ஊரின் அடையாளம்
கோச்சடை முத்தையா சுவாமி கோவில்ல இருக்கு இது தமிழக சுற்றூலா துறை வரைபடத்தில் பாக்கலாம்.
ஊரின் பெயர் காரணம் : புட்டு திருவிழா மதுரைல்ல நடக்கும் தெரியுமில்ல அதாங்க சொக்கநாதர் பாண்டிய மன்னனிடம் பிரம்படி வாங்கிய கதை அது நடந்தது எங்க ஊரிலதான்
கோச்சடை : கோபம்+சடையன்(சிவன் கோபத்துடன் வந்து படுத்த இடம் அதான் இன்னும் தண்ணீர் தொட்டில்ல அணை போட்டுட்டு இருக்காங்க !!!)
வாங்க வந்து பாருங்க
எங்க தோப்பிலிருந்து தான் திருவிழாவுக்கு திருவாத்தி மரம் போகும். அதற்கு சாட்சி வைகை கரையோரம் இருக்கும் மீனாட்சி கோவில்ல இருக்கும் பிரம்பு வடிவம் வடிக்கப்பட்டுள்ள சிவலிங்கம் வந்து பாருங்க.

ஏவூரு மதுர

காட்ல தான் மான் இருக்கனுமா, எங்க மதுரல கிழக்க மேக்க ஓடாத மான்னுக ரெண்டு அதான் நம்ம சிலைமான்னும் துவரிமான்னும் தான்
இப்படி காட்டுகுள்ளர இருக்கிறதுக நிறைய எங்கவூருல இருக்குங்க அப்புக்களா